
நூலின் பெயர் - மக்களாகிய நாம்
ஆசிரியர் – அ.கி. வேங்கட சுப்ரமணியன்
பதிப்பகம் - கிழக்குப்பதிப்பகம்
முகவரி - எண். 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார் பேட்டை,
சென்னை – 18 தொலை பேசி -42009601
விலை - ரூ. 100/-
'' ஏழைகளின் விம்மல் கவனிக்கப்படுவதேயில்லை.
சர்வாதிகாரத்தின் ஒவ்வொர் மட்டத்திலுமுள்ள ஜந்துக்களாலும்
அவர்கள் வதைக்கப்படுகிறார்கள்'' – ஆலிவர் கோல்ட் ஸ்மித். சொன்ன வார்த்தை இன்று வரையில் பழுதில்லாமல் பலித்து வருகிறது. பொதுமக்களாகிய நமக்கு கடந்த இடைத்தேர்தலில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஓட்டுப்போட உரிமையுள்ள ஒவ்வோர் குடிமகனும் தலா. ஆயிரத்து ஜந்நூறு வரை மொத்தமாகவொ சில்லரை விலைக்கோ கிடைப்பதாக கூறுகின்றன.
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் மக்களின் வரிப்பணத்தில் தமக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளுகிறார்கள். எம்எல்ஏ மற்றும் எம்பி யிடமிருந்து தேசத்தை பாதுகாப்பதே மக்களின் தலையாய பணியாக மாறிவிடுகிறது. இதுதான் நமது குடியாட்சியின் மகத்துவம் அல்லது மகாதத்துவம்.
இந்த அவலத்தை எவ்வாறு எதிர்கொள்வது, பொதுமக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? நமது சனநாயக கடமைதான் என்ன? என்பதை நாளிதழ் மற்றும் இதர இதழ்களுக்கு எழுதிய கட்டுரை மூலம் ஆசிரியர் அ.கி. வேங்கட சுப்ரமணியன் முன்வைக்கிறார்.
சமூக ஆர்வம் மிளிரும் கட்டுரைகளின் தொகுப்பாக ஒவ்வோர் பக்கமும் வடிக்கப்படுள்ளது. குடியாட்சி, உள்ளாட்சி, கல்வி, வாழ்க்கை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கருத்துகளும் நிச்சயமாக நல்ல சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் அறிவியல் ஆய்வு வடிவில் மிகத்தெளிவானவை. இந்திய துணைக்கண்டத்தில் சனநாயகம் ஒரு கேளிக்கூத்தாக மாறியதன் பரினாமம் பற்றியதானவையாகும்.
'நமது மாகாணத்தில் முழு மதுவிலக்கு அமுலுக்கு கொண்டுவருவதில் அரசாங்கத்திற்குப் பதினேழு கோடி ரூபாய் நட்டமும் ஏழை எளியவர்களுக்கு எழுபது கோடி ரூபாய் லாபமும் ஆகிறது. ''
- என்ற ஓமந்தூராரின் எண்ணத்தை பிரதிபளிக்கும் வகையில் மதுவிலக்கு சிந்தனைகள் குறிப்பித்தகுந்தவை.
மற்ற மாநிலங்களை ஒப்பு நோக்கும் போது தமிழகத்தில் அதிகமான விதவைப்பெண்கள் உள்ளனர். அதற்கு மதுவிலக்கு தமிழகத்தில் நடைமுறையில் இருப்பதுதான் காரணம் என்ற பகிரங்க குற்றச்சாட்டை தமிழக அரசின் மீது இந்நூல் வைக்கிறது. இந்த குற்றாசாட்டிற்கு மறுப்புரையாக தமிழகத்தில் தான் 'விதவைகள் நலவாழ்வு திட்டம் உள்ளதாக கூறுவதை எவராலும் ஏற்க முடியாது எனவும் மறுத்துள்ளார். ஆம் உண்மைதான், மாற்று மருந்து இருப்பதற்காக எப்படி விடத்தை குடிக்க முடியாதோ அது போல தமிழகத்தில் மதுவை ஏற்க முடியாதுதான். இந்த அரசு தண்ணீரை தனியார் மயமாக்கி 'வாட்டர் வாரியத்தை தனியாருக்கு கொடுத்து, குவாட்டர் வாரியத்தை தாமே (அரசே) நடத்தி மக்களை பார்த்து எகத்தாளம் செய்கிறது.
புத்தகத்தை பிரித்து படித்தபோது சில பக்கத்தில் நம்ப முடியாத, ஆனால் உண்மையாக தகவலை அறிய முடிந்தது. சுதந்திரம் பெற்று பொன்விழா கண்ட பின்பும் 2006 ல் வரப்பெற்ற காவல் துறையின் நிபந்தணைகளுடன் கூடிய பொதுக்கூட்ட அனுமதி (?) வெளியிட்டுள்ளது. அதில் குடிமக்களாகிய நாமது சுதந்திரத்தின் விளிம்பு என்ன என்பது விளங்குகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இல்லாத ஒடுக்கு முறை கூட தற்போது நம்மீது ஏவப்படுவது புலனாகிறது.
மற்றொரு செய்தி 'சேது சமுத்திர திட்டம் குரித்தானது. திட்டத்தினால் பலனடையும் பெரிய கப்பல் நிறுவனத்திற்கு கூட எவ்வளவு லாபம் என தெரியாது என கூறியிருப்பது. அ.கி. வேங்கட சுப்பிர மணியனின் கூரிய ஆய்தறியும் பார்வை பாராட்டத்தக்கது.
உலக நாடுகள் மத்தியில் ஒபமா பெருமிதமாக கையசைக்கிறார். பெருமித்தின் நிழலின் சாரத்தில் மண்டேலாவின் 27 ஆண்டுகாலங்கள் கடந்த சிறையனுபவத்தை தரிசிக்க முடிகிறது. சனநாயக உரிமையை சொல்லும் போது வரலாற்றில் நீங்கத இடம் மண்டேலாவுக்கு உள்ளது. அதனால்தான் தமது நூலில் கருப்பினத்தலைவனின் வாழ்க்கை பாடத்தை சேர்த்திருப்பது மிக பொருத்தமானது.
உள்ளாட்சித்தேர்தலில் வன்முறை தலைவிரித்தாடியதை கட்டுரைகள் அம்பலபடுத்துகிறது. நீதி மன்றத்தால் சனநாயப்படுகொலை புரிந்தவரை அடையாளம் காட்டினால் கூட தண்டிப்பதற்கான வழிவகை சட்டத்தில் இல்லை என்பதை உணரமுடிகிறது.
கல்விக்கென பெறுகிற நிதி கல்விக்காக செலவிடப்படுவதில்லை என்கிற ஆதங்கத்தை மிகத்துல்லியமாக ஆதாரங்களோடு தருகிறது. ஆரம்பக்கல்வியின் அடிப்படை தேவை கூட நிறைவேற்றப்படாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம். அதற்கு மாற்றாக போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் மனோநிலை சரியானதே என ஒப்புக்கொள்ளுகிறார் ஆசிரியர். ஆனால் உரிமைகளை மீட்டெடுக்க மக்களின் ஒன்றிணைந்த போராட்டமே கடைசி ஆயுதம் என்பதை நூல் ஆசிரியர் நியாயப்படுத்துவதில் பட்டும் படாமல் விலகுவதையும் காணமுடிகிறது.
கேரளத்தில் ஐந்து மணிநேரம் தாமதமாக வந்த மருத்துவரை எதிர்த்து சாலை மறியல் போன்றவை நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை சட்டத்தால் சாதிக்க இயலாத போக்கினை பல இடங்களில் போராட்டம் சாதித்துள்ளது என்பதுதான் உண்மை. ஆனால் தமிழகத்தில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மக்களே காரணம் சொல்லி சமாதானம் கற்பிப்பார்கள். தமிழகத்திலும் விழிப்புணர்வு மிகுந்த போராட்டங்கள் நடைபெறுமானால் மக்களாட்சி மாண்புகள் காப்பாற்றபடும் வாய்புள்ளது.
ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது போல ஒரே கருத்தை சொல்லும் செய்திகள் திரும்பத்திரும்ப இடம் பெறுவது படிக்கும் போது சலிப்பை தருகிறது. மக்களாட்சியின் மகத்துவத்தை முன்வைக்கும் ஆசிரியரின் கருத்தில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.
சுதந்திர இந்தியாவில் மக்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை என்பதை சுதந்திரமாக சொல்லும் நூல் ' மக்களாகிய நாம் '
- சென்னைத்தமிழன்.


6 comments:
//சுதந்திர இந்தியாவில் மக்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை என்பதை சுதந்திரமாக சொல்லும் நூல் ' மக்களாகிய நாம் '//
பினிஷிங் டச் அபாரம்!
பொதுவாக இதுபோன்ற ட்ரை சப்ஜெக்ட் புத்தகங்களை முன்பெல்லாம் படிக்கமாட்டேன். இப்போது வேறு வழியில்லை. கட்டாயத்தின் பேரிலாவது படித்தே தீரவேண்டியிருக்கிறது.
நல்ல விமர்சனத்துக்கு நன்றி!
super
raje
எழுத்தாளர் என்ற நிலையுடன் நல்ல விமர்சகன் என்றும் பெயர் பெற்றுவீட்டீர் நண்பரே. பாராட்டுகள்.
பொதுமக்கள் போராட்ட களத்தில் இறங்க வேண்டும் எனில் முதலில் தான் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணரவேண்டும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அறிய வேண்டும். குறைந்தபட்சம் கிராம சபா கூட்டங்களுக்கேனும் செல்ல வேண்டும்.
பெண்ணிணம் மெகா சீரியலிலும்,இளைஞர் பட்டாளம் டாஸ்மாக் சரக்கிலும் மூழ்கிவிட்டநிலையில் அவர்களை மீட்டு கொணர்ந்தால் மட்டுமே மாற்றம் நோக்கிய பயணத்தில் சமூகம் தனது முதல் அடியை எடுத்து வைக்கும்.
அதுவரை பொருளாதர நிபுணர்கள் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டுவந்ததாக கொக்கரிப்பார்கள். ஆனால், பாமரனோ அன்றாடங்காச்சியாய் இலவசம் ஏதும் வராதா என ஏங்கிக் கொண்டிருப்பான்.
//குறைந்தபட்சம் கிராம சபா கூட்டங்களுக்கேனும் செல்ல வேண்டும்.//
பரணிதரன் அவர்களுக்கு தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எனக்கு நினைவு தெரிந்து 97 களில் நடைபெற்ற கிராமசபை தீர்மாணங்கள் கூட இன்று வரையில் எந்த மட்டத்திலுள்ள அதிகாரிகளாலும் திறந்து பார்க்கப்படவில்லை எனவே நினைக்கிறேன். அவை மாவட்ட ஆட்சியம் உள்ளிட்ட அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டு (ஊழல்) பெருச்சாலிகளின் தடகள விளையாட்டு மைதானமாகவே அந்த ஆவனங்கள் ஆகிவிட்டன. இதன் காரணமாக்கூட கிராம சபைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்திருக்கும் என கருதுகிறேன்.
கிராம சபை தீர்மானத்திற்கு தயார் செய்யும் ஆவனத்தாள்களை வெற்றுத்தாள்களாக பள்ளிப்பிள்ளைக்கு கொடுத்தால் கூட உபயோகமாக இருக்கும் என கருதுகிறேன்.
மரத்தை பற்றி கவிதை எழுதுவதை விட,
மரம் (கன்று) நடுவது சிறந்த்துதானே.
- சென்னைத்தமிழன்
my friend very nice, please update your messages as immediately as possible.
your's lovingly,
P.R.Sudhakaran
நண்பரே,
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது..
நிறைய எழுதுங்க....
Post a Comment